ஹோட்டலுக்குள் நுழைந்ததும், ஓரமாக ஒரு டேபிளைத் தேடும் கூச்ச சுபாவம் நம் எல்லோரிடமும் உண்டு.. அது அஜயனுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. அதனால் தான், காலியாக இருந்த பல டேபிள்களை கண்களாலேயே ஓரந்தள்ளி, ஓரத்தில் இருந்த டேபிளை மையம் கொண்டு அதில் அமர்ந்தான்...
"என்ன சார் வேணும்?"
அடுத்த ஷிஃப்டுக்கு வர வேண்டிய ஆள் லீவு போட்டதால் உருவான எரிச்சல், எச்சிலில் நீந்தி வார்த்தைகளாய் வெளியேறியது சப்ளையர் சரவணனுக்கு.
"பன்னீர் மசாலா தோசை எவ்ளோ?"
"35 ரூவா சார்!"
பாக்கெட்டைத் துழாவி, பணத்தை எண்ணினான் அஜயன். பணச் சுருக்கத்தை உணர்த்தியது அவனது புருவச் சுருக்கம்.
"பன்னீர் மசாலா வேணாம். மசாலா தோசை எவ்ளோ?"
'சரியான பரதேசி போலருக்கு. காச எண்ணி வச்சிகிட்டு சாப்புட வர்றான். இவனா டிப்ஸ் தரபோறான்...' என கம்ப்யூட்டரை விட வேகமாக மனதுக்குள் திட்டித் தீர்த்த சரவணன், கடுப்புடன், "30 ரூவா சார்!"
மீண்டும் பாக்கெட்டுக்குள் விரலால் கோலம் போட்ட அஜயன், நிம்மதிப் புன்னகையுடன், "சரி, கொண்டு வாங்க!" என்றான்.
10 நிமிடங்கள் கழித்து கொண்டுவரப்பட்ட தோசை, அடுத்த 5 நிமிடங்களில் அஜயனின் செரிமான மண்டலத்துக்குள் அவசரமாக பயணித்தது.
30 ரூபாய் பில்லை வைத்து விட்டு சரவணன் நகர, பாக்கெட்டிலிருந்து பணத்தை வைத்து விட்டு அஜயனும் வேகமாக நகர்ந்தான்.
அஜயனின் வேகத்தைப் பார்த்த சரவணன் "கிழிஞ்ச நோட்டு வச்சிருப்பானா...காசு கம்மியா வச்சிபுட்டு ஓடிட்டானா..." என மீண்டும் தன் கம்ப்யூட்டர் மனதுக்கு வேலை கொடுத்துக் கொண்டே, பில் பணத்தை எடுத்தான். அதில்....
35 ரூபாய் பணம் சரவணனை ஏளனம் செய்து கொண்டிருந்தது!
Thursday, September 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
Supplier peru Kannana, illa Saravanana?
nice concept..
சரவணன் தான்.. திருத்தி விட்டேன். தூக்க கலக்கத்தில் எழுதியது தான் பெயர்க் குழப்பத்துக்கு காரணம். உணர்த்தியதற்கு நன்றி!!
நல்ல விசயம் சார்...!!!
சாருக்கொரு மசால் தோச பார்சல்!
பாவம் அந்த சப்ளையர்.
அதே நேரம் அஜயன், மனித நேயம்
மிகுந்த மனிதனாய் உயர்ந்து விட்டான்.
நல்ல கரு(த்து)க் கதை.
உங்களுக்கு 'தோசை(க் கதை)யைப்
பிடிக்கும்தானே? படிக்க வாங்க >>>
http://nizampakkam.blogspot.com/2009/08/blog-post_31.html
படித்தேன்... ரசித்தேன் நிஜாமூதீன்...
வருகைக்கு நன்றி!!
நன்றி அரசரே...
வாங்க நற்செய்தி
arumai
Great!
Post a Comment