Sunday, November 8, 2009

மற்றொரு மூலையில்...அடச்சே!!


போன மாதம் கண்புரைக்கு சிகிச்சை செய்ததால், வெளிச்சத்தைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடியுடன் அந்த பூங்காவுக்குச் சென்றார் நடேசன். தினமும் இதே நேரம் வாக்கிங் போனாலும், யாருடனும் இதுவரை பேசியதில்லை.சில நாட்களாக தன் வயதை ஒத்த மூன்று பேரிடம் ஹலோ மட்டும் சொல்வதுண்டு. அவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். நால்வருக்கும் பொதுவான நண்பன் ஹலோ மட்டுமே...

"இன்னைக்காவது அவங்ககிட்ட பேசிடணும்..." என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றார். பூங்காவின் மற்றொரு மூலையில் அந்த மூன்று பேரும் கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக அவர்களை நோக்கிச் சென்றார்.

பூங்காவின் மற்றொரு மூலையில்...
"இத்தனை நாளா நாம வெறுமனே ஹலோ மட்டும் தான் சொல்லிக்கிட்டிருந்தோம். இன்னைக்குத் தான் பேசறோம். ரொம்ப சந்தோஷம். என் பேரு சுந்தரராஜன். ரிட்டயர்டு கவர்மெண்ட் ஸ்டாப். என் மகன் சாதாரண கார் சேல்ஸ்மெனா இருந்தான். இன்னைக்கு உழைச்சு முன்னேறி பெரிய கார் ஷோரூம் வச்சிருக்கான். தன்னோட பிரெண்டுக்கு ஒரு சான்ட்ரோ கார் பிரசன்ட் பண்ணிருக்கான். நட்புக்கு இலக்கணம் அவன்" என்றார் ஒருவர்.

"என் பெயர் அருளப்பன். என் பையனும் சும்மா இல்ல. கார்பென்டரா இருந்தான். படிப்படியா முன்னேறி இன்னைக்கு பெரியளவுல ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றான். தன்னோட பிரெண்டுக்கு தாம்பரத்துல பிளாட் பிரசன்ட் பண்ணி அசத்திட்டான். என் மகன் தான் நல்ல நட்புக்கு உதாரணம்..." இது இரண்டாமவர்.

"நான் மனோகரன். என் பையன் ஷேர் மார்க்கெட் புலி. சமீபத்துல தன்னோட நண்பனுக்காக லாபத்துல இருக்குற கம்பெனியோட 1 லட்ச ரூபா ஷேர்ஸ் சும்மாவே கொடுத்துருக்கான். நட்புக்காக எதையும் செய்வான் என் மகன்" என்றார் மூன்றாமவர்.

இவர் பேசி முடிக்க, நடேசன் அங்கு வந்து சேர்ந்தார்.

"வாங்க சார். நீங்க கொஞ்சம் லேட். நாங்க மூணு பேரும் அறிமுகமாயிட்டோம். உங்களையும் உங்க குடும்பத்தைப் பத்தியும் சொல்லி அறிமுகப்படுத்திக்கோங்க! அப்புறம் நாங்க எங்கள பத்தி சொல்றோம்"

"வணங்கம்க...என் பேரு நடேசன். எனக்கு பொய் பேச வராது. நான் ரிட்டயர்டு ஸ்கூல் டீச்சர். எனக்கு ஒரே ஒரு மகன். உருப்படியா எந்த வேலையிலும் நிலைக்கறதில்லை. சமீபத்துல தான் அவன் ஒரு ஹோமோன்னு கண்டுபுடிச்சேன். அவனுக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' அதிகம். அதுல ஒரு கார் கம்பெனிகாரன் சாண்ட்ரோ கார் கொடுத்துருக்கான், ரியல் எஸ்டேட்காரன் தாம்பரத்துல பிளாட் கொடுத்துருக்கான், ஷேர் பிசினஸ் பண்ற ஒருத்தன் 1 லட்ச ரூபா ஷேர்ஸ் அன்பளிப்பா கொடுத்துருக்கான். என்ன கருமத்துக்குத்தான் இவனுங்கள்லாம் இப்படி அலையறானுங்கன்னு தெரியல...சரி உங்களையும், உங்க பசங்கள பத்தியும் சொல்லுங்க!

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...இதெல்லாம் ஒரு கதைன்னு எங்க நேரத்தை கெடுத்தியேன்னு நினைக்கிறவங்க கருத்துரைல திட்டலாம்!

27 comments:

யாரோ ஒருவர் said...

அறிமுகங்கள் நன்றாக இருக்கிறது,முடிவு வருத்தத்தை அளிக்கிறது.

ஷண்முகப்ரியன் said...

ஹா!ஹா! இந்தத் திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை,அசோகன்.

கலையரசன் said...

பிடிச்சிருக்கு! திட்ட தோனலை.. பிரேம்குமார்.
ஓட்டு போட்டாச்சு..

கலையரசன் said...

பிடிச்சிருக்கு! திட்ட தோனலை.. பிரேம்குமார்.
ஓட்டு போட்டாச்சு..

பிரேம்குமார் அசோகன் said...

வருகைக்கு நன்றி திருமதி. ஜெயசீலன்.

சீரியஸான கதை என்ற மனநிலையில் படித்துள்ளீர்கள். அதனால் தான் வருத்தமேற்பட்டுள்ளது.

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி ஷண்முகப்ரியன் சார்...

//ஹா!ஹா! இந்தத் திருப்பத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை,அசோகன்..//

நானே எதிர்பார்க்கவில்லை சார்!!

பிரேம்குமார் அசோகன் said...

ஓட்டுப்போட்ட கலையரசன் வாழ்க!!

தொடர் ஆதரவுக்கு நன்றி!

ISR Selvakumar said...

எதிர்பாராத கிளைமாக்ஸ். மெல்லிய “ஏ” கிளாஸ்.

கபிலன் said...

: )

வரதராஜலு .பூ said...

நல்லா(தானே) இருக்கு கதை.

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி செல்வா சார்...

பிரேம்குமார் அசோகன் said...

வருகைக்கு நன்றி கபிலன்...

பிரேம்குமார் அசோகன் said...

//நல்லா(தானே) இருக்கு கதை//

நன்றி வரதராஜுலு

venki said...

Very nice story Prem!

Unknown said...

நல்லதொரு கதையோட்டம். சிறியதொரு கருத்துப் பொறிக்கு சிக்கென்ற திரைக்கதை. அன்பு அண்ணன் பிரேம் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்!

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி வெங்கி!

பிரேம்குமார் அசோகன் said...

//அன்பு அண்ணன் பிரேம் மென்மேலும் வளர என் வாழ்த்துகள்!//

நன்றி தம்பி...வாழ்த்துக்கும், வருகைக்கும்!!

Unknown said...

அருமையான ட்விஸ்ட் சார்...... சினிமால வர்ற மாதிரி ஒரு புள்ளி வெச்சு கதைய சுத்தி சுத்தி நெஞ்சிருக்கீங்க..... (நீங்க தானே எழுதுனது??!!)

ரொம்ப நல்லா இருக்கு...... இன்னும் எதிர்பார்க்கிறோம்....!!!

Anonymous said...

கதையா? அறிவுரையான்னு புரியலே சார்!

சிற்றரசு தங்கவேல் said...

ரொம்ப நல்லாயிருந்தது சார்....!!!

பிரேம்குமார் அசோகன் said...

தம்பி சாந்தகுமாரா...இது நான் எழுதுனது தான்...வேணும்னா விர்ச்சுவல் கற்பூரம் அடிச்சி சத்தியம் செய்யறேன்

பிரேம்குமார் அசோகன் said...

வாங்க அனானி..
நான் ரவையை வேக வச்சி கொடுத்துட்டேன். அதுல கிச்சடி பண்றதும், கேசரி செய்யறதும் உங்க கிட்ட தான் இருக்கு!!

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி அரசர்

kishore said...

சார்.. நேத்தி பார்த்தேன். ஆனா படத்த பார்த்து பிறகு படிச்சிக்கலாம்னுவிட்டேன்.. பார்த்தா .. அட்டகாசம் சார்.. இந்த முடிவு எதிர்பார்க்காதது..

பிரேம்குமார் அசோகன் said...

பிறகு படிக்கலாம் என்று விட்டாலும், நினைவில் வைத்து படித்த உங்கள் அன்புக்கு நன்றி கிஷோர்!!

Prasanna said...

ஹா ஹா காமெடி திருப்பம்.. A crisp story.. nice..

Unknown said...

Nice one at the time when gay legalization has come up. Good one to read!!!

Post a Comment