Tuesday, October 27, 2009

காதல்


இரண்டு அழகான பட்டாம்பூச்சிகள் காதலித்தன. ஒருநாள் பூந்தோட்டத்தை வட்டமிட்டு மகிழ்ந்த போது...எப்போதும் பெண் பட்டாம்பூச்சியை சீண்டிப் பார்த்து விளையாடும் ஆண் பட்டாம்பூச்சி, " நமக்குள்ள ஒரு சின்ன விளையாட்டு. இதுல யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போமா?" என்றது.

"உனக்கு எப்பவுமே விளையாட்டு தான். சரி, என்ன விளையாட்டு?"

"நாளை அதிகாலையில் இந்த மொட்டு பூவாக மலர்ந்த உடனே, பூவுக்கு நடுவுல உட்காரணும். யார் முதல்ல இடம் பிடிக்கிறாங்களோ, அவங்களோட காதல் தான் உயர்ந்ததுன்னு அர்த்தம்! என்ன சொல்ற?"

"போட்டியில நான் தான் ஜெயிப்பேன். என்னோட காதல் தான் உயர்ந்தது!"

"ஆண்களோட காதல் தான் உயர்ந்தது. நாளைக்கு நீ அதை பார்க்கப் போற"

அடுத்த நாள் காலை, அந்தப் பூ மலர்வதற்கு முன்பே, ஆண் பட்டாம்பூச்சி அங்கு சென்று விட்டது. பூ மலரும் நேரத்தில் உடனே சென்று உட்காருவதற்குத் தயாராக சிறகுகளை விரித்து காத்திருந்தது. பூ மலரத் தொடங்கும் போது, "இன்னும் அவளைக் காணோமே...சே, இவ்வளவு தானா அவளோட காதல்?" என்ற எரிச்சலோடு பூவை நெருங்கியது.
மொட்டு மெல்ல விரிந்தது. உள்ளே... பெண் பட்டாம்பூச்சி. நள்ளிரவே மொட்டுக்குள் தன்னை வருத்தி புகுந்ததால் கிழிந்த சிறகுகளுடன், இறந்து திறந்த அதன் கண்களில் வலியையும் மீறி காதலையும், காதலனையும் வென்று விட்ட பரவசத்தின் மிச்சம்!!



கதை பிடித்திருந்தால், தமிழிஷ் பட்டையில் ஒரு ஓட்டைப் போடுங்கள்!!

20 comments:

Unknown said...

Heart Touching!

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி ஜெய்

வலசு - வேலணை said...

மனதைத் தொட்டது

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி வலசு

Anonymous said...

nice really good....

ஷண்முகப்ரியன் said...

எவ்வளவு அழகான மரணம்.
எவ்வளவு ஆழமான சோகம்.

அருமை,பிரேம்.மிக.மிக.

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி ஷண்முகப்ரியன் சார்...

மலையின் நிழல் இந்த மடுவின் மீதும்...பெருமைப்படுவதையும், நன்றி சொல்வதையும் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை சார்!

kishore said...

really heart touching love..

வரலாற்றில் இன்று!!! said...

Hai..

Prem Nice story... Antha male pattampoochi thaan neengalooo?

முனைவர் இரா.குணசீலன் said...

கொன்னுட்டீங்க..

(பட்டாம்பூச்சியை மட்டுமல்ல..)

முனைவர் இரா.குணசீலன் said...

கதை நன்றாகவுள்ளது நண்பரே

அன்புடன் மணிகண்டன் said...

நல்லா இருந்ததுங்க...

பிரேம்குமார் அசோகன் said...

அந்த ஆண் பட்டாம்பூச்சி நான் மட்டுமில்லை சாலமன்...நீங்களும் தான்!
கருத்துக்கு நன்றி

பிரேம்குமார் அசோகன் said...

தங்களின் வருகைக்கு நன்றி குணசீலன் சார்..

பிரேம்குமார் அசோகன் said...

நன்றி மணிகண்டன்

பிரேம்குமார் அசோகன் said...

தொடர் ஆதரவுக்கு நன்றி கிஷோர்

மணிபாரதி துறையூர் said...

நல்ல கதை பிரேம். Impressive. பெண் பட்டாம்பூச்சி பாவம்.. காதலை இப்படித்தான் நிருபிக்க வேண்டுமா..:-(

பிரேம்குமார் அசோகன் said...

கருத்துக்கு நன்றி மணி...

இது காதலுக்கான தற்கொலையோ அல்லது பலியோ அல்ல. போட்டியில் வென்று தன் காதலை நிரூபிக்க வேண்டுமே என்ற பெண்பட்டாம்பூச்சியின் அதீத பிரயத்தனம்

ஊடகன் said...

நன்னா இருந்தது தலைவா....

முடிவு காதல் வலியை தருகிறது.........

Anonymous said...

காமெடி & நல்ல கருத்து அருமை .........சாடர்:)

Post a Comment