Monday, February 2, 2009

புண் + தைலம் = முதல் காதல்!

காதல் ஜெயித்தவனுக்கு பூமாலை...தோத்தவனுக்கு காமாலை...! (ஒரு பொன்மாலைப் பொழுதில், வீட்டுல குப்புற படுத்துகிட்டு நான் யோசிச்ச கவிதை)

முதல் காதல் (அல்லது முதல் ஈர்ப்பு, அல்லது முதல் சைட்) என்பது ஒரு ஃபீலிங்...அதுல ஃபாலிங் ஆனா, கடைசியில ஃபூலிங் (கவித.. கவித...).
அஞ்சப்பர் செட்டிநாடு ஓட்டல்ல புகுந்து 500 ரூபாய்க்கு முழுங்கி, வயித்துல வனவிலங்கு சரணாலயத்த உருவாக்கிட்டு கை கழுவி பில்லுக்காக காத்திருக்கும் போது...பிரிண்டிங் மிஸ்டேக் காரணமா 50 ரூபாய்க்கு பில் வந்தா மனசு எப்படி கும்மியடிக்கும்?! அப்படியொரு குதூகலத்தைத் தான் முதல் காதல் ஏற்படுத்தும்.


நான் அப்போ ஒன்பதாவது படிச்சிட்டிருந்தேன் (சென்னையில). எங்க ஒண்ணு விட்ட பக்கத்து வீட்டுல (ஒரு வீடு தள்ளி) 8வது படிக்கிற அழகான பொண்ணு இருந்தா. அவ பேரு அசின் (அந்தப் பொண்ணோட எதிர்காலம் கருதி பேர மாத்திருக்கேன்). ரெண்டு பேர் வீட்டுக்கும் நடுவுல இருக்குற வீட்டுல தான் நாங்க (நான், அசின், உப்பிலி, அவன் தம்பி லோகேஷ்) ஒண்ணா கூடி விளையாடுவோம். அவ வழக்கமா என் கூட தான் அதிக நேரம் கேரம் போர்டு விளையாடுவா.


ஒவ்வொரு முறை அந்த வீட்டுக்கு அவ வரும்போதெல்லாம் ஆமிர்கான்... அமிர்கான்னு என்னை அழகா கூப்பிடுவா (என்னோட எதிர்காலம் கருதி, என் பேரையும் மாத்திருக்கேன்). நானும், இன்ஸ்பெக்டர் கூப்பிட்டவுடனேயே ஓடுற ஏட்டய்யா மாதிரி பரபரன்னு ஓடி அவ முன்னாடி போய் நிப்பேன். இப்படியே கூத்தும் கும்மாளமுமா எங்களோட நாட்கள் ஓடுச்சி...


ஒரு நாள் வழக்கம் போல அவ என்னை கூப்பிட்டவுடனேயே நான் துள்ளி குதிச்சி ஓடும்போது, தெரியாம எங்க அப்பச்சி கால தட்டி விட்டுட்டேன். உடனே அவங்க "அட ந்தந்தானே...பொண்டாட்டி கூப்புட்டாப்புல இப்பிடி ஓடுறானே...இந்தப் புள்ளய கட்டுனா என்னைய கொலையா கொண்டுபுடுவான் போலருக்கே யாத்தீ" அப்படீன்னு கத்த... எனக்குள்ள ஒரு Na + O2 → Na2O (ரசாயன) மாற்றம்.


அந்த நிமிஷம் முதல், டிவி பெட்டிக்குள்ள பாட்டு ஓடும்போது என்னை ஹீரோவாகவும் அவளை ஹீரோயினாகவும் கற்பனை பண்ணிப் பாப்பேன். அவ வெளிய வந்து நிக்கும்போது, என்ன கலர் டிரஸ் போட்டுருக்கானு ஒளிஞ்சிருந்து கவனிச்சி... குடுகுடுன்னு ஓடிப்போய் அதே கலர் டிரஸ் மாட்டிட்டு அவ முன்னாடி நிப்பேன். எதுக்கு??? "சேம் பிஞ்ச்"னு சொல்லி என் கையை கிள்ளுவா பாருங்க....அதுக்கு!

இப்பிடியே போய்க்கிட்டிருந்தா என்ன அர்த்தம்னு ஒருநாள் என் காதலை(?) சொல்லத் துணிஞ்சிட்டேன். வீராவேசமா கிளம்புன என்னை, சுரேஷ் (பிரெண்டு) தடுத்து நிறுத்தினான். இப்பிடியெல்லாம் வெறுங்கைய வீசிகிட்டு போய் சொன்னா வேலைக்காவாதுண்ணு எனக்கு பயங்கர ஐடியா கொடுத்தான். கேட்டவுடனேயே கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன். ஆனா அவன் +2 படிக்கிறதாலும், பல பொண்ணுங்களுக்கு சைக்கிள் டிரைவர் வேலை பாக்குறதாலும் அவன் பேச்சை மதிச்சேன்.


அவன் சொன்ன ஐடியா: 1. என் ரத்தத்தாலே லவ் லெட்டெர் எழுதிக்கிட்டு அவகிட்ட கொடுக்கணும். 2. லெட்டெர் கொடுக்கும்போது, சிவாஜி அளவுக்கு இல்லைண்ணாலும் சரத்பாபு அளவுக்காவது கண்ணீர் விடணும்.
இந்த ஐடியாவை வேத வாக்காக நெனச்சிக்கிட்டு, வீட்டுக்கு போய் லெட்டெர் எழுதத் தயாரானேன்.


பிளேடை எடுத்து, கை மணிக்கட்டைக் கிழிச்சி...அய்யய்யோ, இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுண்ணு முடிவு பண்ணினேன். காயமே இது பொய்யடாங்குற பழமொழி நினைவுக்கு வர, உடனே கையிலிருந்த விழுப்புண்ணைப் பார்த்தேன் (போன வாரம் ஓசியில டி.வி.எஸ் சாம்ப் வண்டி வாங்கி ரோட்டுல பிலிம் காட்டுனப்போ, பேலன்ஸ் மிஸ்ஸாகி லைட்டா குப்புற விழுந்ததுல பட்ட அடி). புண் கொஞ்சம் ஆறி, மேல கருப்பு கலர்ல மூடியிருந்தது. அத லைட்டா கீறி விட்டுட்டேன். கொஞ்சம் ரத்தம் வந்தது. சட்டுனு அத கையில ஒத்தி ஒரு பேப்பர்ல "I love you" அப்படீன்னு எழுதி முடிச்சாச்சு..


அடுத்து, கண்ணீர். வீட்டுல அம்மா என்னை குனிய வச்சி குமுறும்போதும், பவானி டீச்சர் என் தலையில டிரம்ஸ் வாகிக்கும்போதும் கூட அழாம நெஞ்சுறுதியோட அப்பிடியே நிப்பான் இந்த ஆமிர்கான். இப்படி எதையும் தாங்கும் இதயத்தோட திரிஞ்சிகிட்டு இருந்த நான்... எப்பிடி ஒரு பொண்ணு முன்னாடி அழுவறது? அப்போதான் எனக்குள்ள இருந்த ஐன்ஸ்டின் + பிரேமானந்தா ஒரு ஐடியா பண்ணாங்க. தைலத்தை கொஞ்சம் அதிகமா தலையில தடவுனாலோ, அத கண்ணுக்கு கிட்ட கொண்டு வந்தாலோ தன்னால கண்ணீர் பெருகும். இந்த ஐடியா சூப்பர்னு எனக்குள்ள சொல்லிக்கிட்டு, உடனே போருக்குத் தயாரானேன்.


வீட்டுல இருந்து அமிர்தாஞ்சன் தைலம் & நம்ம லெட்டர் எடுத்துக்கிட்டேன். அசின் பக்கத்து வீட்டுக்கு வந்து என்னை கூப்பிட்டா, கேரம் விளையாட.
நான் மெதுவா அந்த காம்பவுண்ட் கதவ திறந்து உள்ள போனேன். அங்க, அந்த வீட்டு ஆன்ட்டி இருந்ததால, பேசாம உக்காந்துக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல அசின் "நீ உம்மணாமூஞ்சி மாதிரி இருக்க... நான் வீட்டுக்கு போறேன் போடா" அப்படீன்னு சொல்லிட்டு கிளம்புனா.. எனக்கு மனசெல்லாம் படபடன்னு இருக்கு... என்ன பண்றதுண்ணு தெரியல.. அவ உண்மையிலேயே கிளம்புறா. உள்ளுக்குள்ள பதறுது.. இவ்ளோ நேரம் இருந்த தைரியம் இப்போ கால் வழியா நழுவி தரையில ஓடிடுச்சி.... அவ வீட்டு வாசலை நெருங்கியதும்.. இதுக்கு மேல தாமதிக்கக் கூடாதுண்ணு உடனே அவ பின்னாடி ஓடிப் போய் "அசின், ஒரு நிமிஷம் இங்கயே இரு. போய்டாத"னு சொல்லிடு, அவசர அவசரமா காம்பவுண்டு கேட் கிட்ட ஓடிப்போய் பரபரப்பா அமிர்தாஞ்சன் டப்பாவைத் திறந்தேன்.


அவ, "எங்கடா போய்ட்ட, போ... நான் போறேன்"னு சொல்லிட்டு அங்கிருந்து நகர.... நான் என்ன பண்றதுன்னு தெரியாம தைலத்தை எடுத்து ரெண்டு கண்ணுலயும் தடவிட்டேன். பாக்கெட்டுலருந்து லெட்டர எடுத்துக்கிட்டு நான் திரும்பவும், அவ என் முன்னாடி வந்து நிக்கவும் சரியா இருந்தது...
அவ கிட்ட பதட்டத்தோட "அசின், உன்ன..இந்த... இத... நீ... நான்...ரத்தத்துல லெட்டர்... என் கண்ணீரைப் பார்...இதயம்...அய்யோ அம்ம்ம்ம்மா கண்ணு....ஆஆஆஆஆஆஆ...கண்ண்ண்ண்ண்ணூஊஊஊஊஊஊஊஉ அச்சினூஊ........."


"எரும மாடு, எனக்குன்னு வந்து பொறந்து தொலச்சிருக்கு....தல வலிச்சா தைலத்த கண்ணுலயா தேய்ப்பாங்க...? இந்த சனியனால 300 ரூபா கண் டாக்டருக்கு அழ வேண்டியதாப் போச்சி...பரீட்சை நேரத்துல கண்ணு வீங்கி எங்க உசிர எடுக்குறான்....இப்போ எக்ஸாம் எழுத முடியுமான்னு தெரியலயே..."



பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

11 comments:

ஸ்ரீமதி said...

super.. :)) Nallaa sirichen.. :))))))))

பிரேம் said...

Nandri!!

Venkateshan.G said...

மிக மிக அருமை ,உள்ளதை மயிலிரகால் வருடியதை போன்ற உணர்வு . ........இந்த மாதரி காதல் அனுபவம் சிறு வயதில் வரவில்லை என்றால் ,நீங்கள் உங்களது வாழ்கிஎன் ஒரு நல்ல கால கட்டத்தை அனுபவிக்காமல் விட்டு விட்டிர்கள் அல்லது கடவுள் உங்க பக்கம் பார்க்கவில்லை என்று அர்த்தம்.

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல காமெடி....கனவு கானுங்கள் என்றூ திரு அப்துல் கலாம் கூறியது இதைத்தானா...!!!

பிரேம் said...

நன்றி வெங்கடேசன்... நீங்க சொல்றத பார்த்தா, உங்க சிறு வயதிலும் ஏகப்பட்ட "புண்கள்" இருக்கும் போல தெரியுதே!!

வணக்கம் ஷர்மா..வாங்க

ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணாத்தே கலக்கலா எழுதறீங்க... Continue....:)))

vetrida puridal said...

அந்த பெண்ணோட எதிர்காலம் கருதியும் உங்க எதிர்காலம் கருதியும் பெயர்களை மாற்றின நீங்க ஏன்யா நண்பர்களின் (suresh)எதிர்காலத்தை பற்றி மட்டும் கண்டுக்காம விட்டுடீங்க !! பழைய காலங்களிலும் பிகர பாத்தா Friend கட் பண்றாங்க !!

பிரேம் said...

அது நம்ம கலாச்சாரம்...நான் மாத்த விரும்பல

kishore said...

பொதுவா சின்ன வயசுல கூட படிக்குற பொண்ணுங்க கிட்ட இல்லனா கிளாஸ் எடுக்குற ஜோதி மிஸ் மேல காதல்!(?) வரும்னு சொல்வாங்க... ஆனா நீங்க புயுசர பிளான் பண்ணி அப்போவே உங்களைவிட ஒரு வயசு சின்ன பொண்ணுக்கு ரூட் விட்டுஇருக்கீங்க...

விக்னேஷ்வரி said...

வாய் வலிக்க சிரிச்சேன். :)))))))

Parthasarathi Subramanian said...

//Na + O2 → Na2O//

அதெல்லாம் சரி அது என்ன ஒரு ரசாயன மாற்றம்.
உங்க உடலின் ரசாயன மாற்றத்தை வெளிப்படுத்த வேற எதுவுமே கிடைகலையா.
விரல்ல சிக்குன பொத்தான தட்டி விட்டீங்க போல!!


சும்மா லுலூலாயக்கு..


கதை மிக அருமை. நகைசுவையாக இருந்தது.

Post a Comment