Monday, February 2, 2009

ஹலோ மைடியர் ராங் நம்பர்...!!

தலைப்பை பாத்துட்டு ஏதோ, ரொமாண்டிக்கான கதை போல இருக்கும்ணு நெனச்சி அதே மூடுல படிச்சீங்கன்னா.. ஐ அம் சாரி! ஆர்வக் கோளாறால நான் ஆப்பு வாங்குன கதையைத் தான இப்போ பார்க்கப்போறீங்க.

10 வருஷங்களுக்கு முன்னாடி எனக்கே எனக்கான செல்போனை (செங்கல் வகையறா) அதிக விலை கொடுத்து வாங்குன நேரம் அது. கையில் செல்போன் இருந்ததால கண்ணு மண்ணு தெரியாம கடலை போட்டு, முழி பிதுங்கி பில்லு கட்டிக்கிட்டிருந்தேன் (ஒரு கட்டத்துல செல்போன வித்து பில்ல செட்டில பண்ணிருக்கேன்னா பாத்துக்கங்களேன்). ஆனாலும் கெத்து மெயின்டெய்ன் பண்ணணுமே....அதுக்காக மிஸ்டு கால் வந்தாக் கூட உடனே அவுட்கோயிங் கால்களை சகட்டு மேனிக்கு அடிச்சித் தள்ளி திரிஞ்ச காலம் அது.

ஒருநாள் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வண்டில போகும்போது, போன் ரிங் அடிக்குது. வண்டிய யாருக்கும் பாதகமில்லாம ஓரங்கட்டி (வண்டி கண்டிஷன் அப்பிடி) போன் எடுத்துப் பாக்குறதுக்குள்ள.....கால் கட்டாயிடுச்சி. வித்தியாசமா, நீளமா, புதுசா இருந்த நம்பரப் பாத்து கொஞ்சம் டர்ரியலானேன். ஒரு வேளை வேலைக்கு அப்ளை பண்ணுன கம்பெனியோட ஹெட் ஆபீஸ்ல இருந்து கால் பண்றாய்ங்களா? அய்யயோ அதிர்ஷ்டலட்சுமி ரிங்டோன் வழியா காட்டு கத்து கத்துனதுக்கு அப்புறமும் நாம எடுக்கலயா? இத விடக் கூடாதுன்னு உடனே போன எடுத்து அந்த நம்பருக்கு கால் அடிச்சேன்.

"ஹெல்லோ... ஐ காட் மிஸ்ட் கால் ஃப்ரம் திஸ் நம்பர்... ஆங்...வெல், மே ஐ நோ வூ இஸ் திஸ்..?"
எதிர்முனையில்: "அல்லோஓஓ.. யாரே.. ஒண்ணீயுமே புர்லியே. ஆரு வோணும்? ஒரு பெரிசு பேசியது.
நான் லைட்டா ஜர்க் ஆனேன். "ஆங்... எனக்கு இப்போ இந்த நம்பர்லருந்து கால் வந்தது. இது எந்த ஏரியா...யாரு கால் பண்ணுனது?"
"இது திர்ணாமல (திருவண்ணாமலை) சார்... ரங்கன் தான் இங்க இருந்தான். இர்ங்கோ அவுன கூப்புர்றேன்"
யாரது ரங்கன்? சரி கால் பண்ணியாச்சி... காத்திருந்து பேசித்தான் பாப்போமே...
சரியா 12 நிமிடங்கள் கழித்து, தகர டப்பாவுல ஆணியை வச்சி தேச்ச மாதிரி ஒரு குரல்
"ஆரு நீங்கோ...என்னா வோணும்?"
"நான் சென்னையில் இருந்து பேசறேன்..என்னோட நம்பர் 9840013929. எனக்கு கால் பண்ணீங்களா?
"ஒரு நிமிஷம் இருங்க சார்.."
10 நிமிடங்கள் கழித்து, " சார் தெர்ல சார், யாரோ ஒருத்தரு வந்தாரு.. போன் பண்ணிட்டு கெடைக்ககலைன்னு போய்ட்டாரு..."
"ஹ்ம்ம்.. இது என்ன இடம்?
"இது எஸ்டிடி பூத்து சார்"
"ஓக்கே....நான் வைக்கிறேன்"
"சார் சார்...ஒரு நிமிஷம் இருங்க. போன் பண்ணுன ஆளு வந்துட்டாரு, பேச சொல்றேன்...
"5 நிமிட மவுனம். "ஹேல்லோ"
"ஆங்... ஹல்லொ. நான் சென்னையில் இருந்து பேசுறேன். என்னோட நம்பர் 9840013929. எனக்கு நீங்க கால் பண்ணீங்களா?"
"ஓ.. சாரி சார், நான் தான் பண்ணுனேன். ஆனா நம்பர் தப்பா அழுத்தி உங்களுக்கு போய்டுச்சா... சாரி, ராங் நம்பர்!"

சரியாக 22 நிமிடங்களுக்குப் பின் அந்த காலை துண்டித்த ,பின் செல்போனை ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு வண்டி கண்ணாடியில் முகத்தை பார்த்தேன்....!!!பிடிச்சிருந்தா ஓட்டு போட்டுட்டு போய்டுங்க!!

18 comments:

Bala said...

Okaaai

பிரேம் said...

அப்படீன்னா?

Kamal said...

ஏங்க இப்படி???????????
உலக மொக்கை டா சாமி

Namakkal Shibi said...

:)

RAMASUBRAMANIA SHARMA said...

In the initial phase , we encounter some difficulties...after that we become masters of using mobile, and in fact, mobile phones are becoming our part and parcel of our life...especially people working in emergency operations segment...For Eg:-DOCTORS, hospitals, and para-medics...

kishore said...

why blood? ahhh... same blood... please continue...

kishore said...

நண்பா எனது முதல் பதிப்பின் தொடர்ச்சி வெளிஇட்டுள்ளேன்.. முடிந்தால் படித்து உங்கள் கருத்தை தெரியப்படுத்துங்கள் ...
நட்புடன்
கிஷோர்

SanJaiGan:-Dhi said...

ஒரு 1000 ரூபாய் பில் வந்திருக்காது? :))

10 வருஷத்துக்கு முன்னாடியே செல் போனாஆஆஆஆஆஆஅ? ;((

பிரேம் said...

வாங்க சஞ்சய்...வாங்க சர்மா!!
ஆமா, அப்போ செங்கல் அளவுக்கு மொபைல்போன் (விலை அப்போது 6 ஆயிரத்து சொச்சம்). அவுட்கோயிங் 2 ரூபா. இன்கமிங் 1 ரூபா....

பிரேம் said...

என்ன விட பலே மொக்கைகள் இருக்காங்க கமல்...

கொஞ்சம் அகலமா சிரிக்கலாம்ல சிபி!!

haji thameem said...

ennaa kodumaida saami

ஸ்ரீமதி said...

:)))

பிரேம் said...

நன்றி ஸ்ரீமதி!!

வாங்க ஹாஜி..சில அனுபவங்கள் கொடுமையாத்தான் இருக்கும்!!

niceboy said...

ore kulapama irrukku

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

ஷண்முகப்ரியன் said...

இயல்பான நகைச் சுவை.நன்றாக இருந்தது,ப்ரேம்.keep it up.

பிரேம் said...

நன்றி ஷண்முகப்பிரியன் சார்!!

மணிபாரதி துறையூர் said...

இந்த அனுபவம் எனக்கும் உண்டு பிரேம், என்றாலும் நாம் Call பண்ணத்தான் வேண்டி இருக்கிறது எதாவது முக்கியமான அழைப்பாக இருக்குமோ என்ற தவிப்பால்...

Keep posting. பொதுவான அனுபவத்தை சுவையாக எழுதுவதுதான் ஒரு படைப்பின் வெற்றி.

Post a Comment