இது கதையல்ல...நிஜம்!
சம்பவம் நடந்தப்போ ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டி-காப்ரியோவுக்கு வயசு 7.. எனக்கும் அப்போ 7 வயசு தான். (நடந்த சம்பவத்துக்கும் அந்த நடிகருக்கும் எந்த தொடர்பும் இல்ல). பசிபிக் பெருங்கடல்ல்ல புயல் சின்னம் உருவாகியிருக்கறதா, லண்டன் பிபிசி ரேடியோவுல செய்தி ஒளிபரப்புன அதே நேரம், எங்க தெருவுல நான் 10 சின்ன பசங்களோட ஐஸ் பாய்ஸ் விளையாடிகிட்டிருந்தேன் (இந்த விளையாட்டுக்கு ஏன் இப்படி பேரு வச்சாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கேன்).
எங்க தெருவுல எல்லா வீடுகளும் பழைய காலத்து டைப்.. அதனால ஒளிஞ்சிகிறதுக்கு நெறைய இடம் இருக்கும். கோழி பீ (இது ஒரு பையனுக்கு நாங்க வச்ச பேரு. அவன் உண்மையான பேரு மறந்து போச்சி) கண்ண மூடி 100 எண்ணுனான். நாங்க எல்லாரும், ஆளுக்கொரு திசையில போய் ஒளிஞ்சிக்கிட்டோம். எனக்கு ஒளிஞ்சிக்க கிடைச்ச இடம், மனிதனுக்கு சகிப்புத்தன்மையை கத்துக்குடுக்குற இடம்... அதாவது பாழடைஞ்ச கக்கூஸ். அங்க போய் நின்னுக்கிட்டேன்.
எல்லாரையும் அவன் கண்டுபுடிச்சிக்கிடே வந்துக்கிட்டிருக்கான். ஆனா என்னை மட்டும் கண்டுபிடிக்க முடியல. அந்த இடத்துல 5 நிமிஷத்துக்கு மேல் நின்னதால போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சி....சுத்தி, முத்தி பார்த்தேன். தடிசா நூல் மாதிரி ஒரு ஒயர் அறுந்து தொங்கிக்கிட்டிருந்துச்சி... நாம தான் தாமஸ் ஆல்வா எடிசனோட கொளுந்தியா பேரனாச்சே... உடனே ஆராய்ச்சி பண்ணலாம்ணு அந்த ஒயரைத் தொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..... ஆஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வூஊஊஊஊஊஊஊ...ஒரு 10 வினாடிகளுக்கு பாலே டான்ஸ் ஆடி முடிச்சி கீழ விழுந்துட்டேன். உடனே தெரு மொத்தமும் அங்க கூடிடுச்சி..
சில இளவட்ட பசங்க கதவ உடச்சி அரை மயக்கத்துல இருந்த என்னை தூக்குனாங்க. அப்போ, கோழி பீ அங்க ஆஜராகி, என்னை தொட்டுட்டு சொன்னான்.........
"டேய் நீ அவுட்"
பிடிச்சிருந்தா, ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க சாமி!
Sunday, February 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அடபாவி உன் விஞ்ஞான அறிவு பசிக்கு ஒரு அளவு இல்லையா?
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
என்ன தைரியம் இருந்தா ஷாக் அடிச்சதும் பாலே டான்ஸ் ஆடி இருப்பீங்க? ஒரு தமிழ் பற்று வேணாம்? அடுத்த தடவ ஷாக் அடிக்கும்போது கரகாட்டம் ஆடனும் சரியா?
நன்றி ஆண்ட்ரு..
வாங்க கிஷோர்...உங்க தமிழ் பற்றுக்கு அளவே இல்லயா? நீங்க சொல்ற மாதிரி ஆடுனா அது கரகாட்டமா இருக்காது... "கிரக"ஆட்டமாயிடும்!
நல்லாயிருக்கு..
வாழ்த்துக்கள்.
சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.
பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்.
நிச்சயமாக!!
Pallu valikuthu sirichu sirichu....
:-)))))))))))
Post a Comment