Bollywood music director AR Rahman bags 2 Oscars"
- சி.என்.என், 9 எக்ஸ் மற்றும் பிற ஹிந்தி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சேனல்கள்.
"The renowned Bollywood Composor AR Rahman wins Oscar"
- ஹிந்தி மற்றும் ஆங்கில பத்திரிகைகள்.
"ஏ.ஆர். ரஹ்மான் சாதித்து விட்டார். இது நம் இந்தியாவுக்கும், பாலிவுட் உலகுக்கும் பெருமை." - சாருக்கான், சல்மான் கான் மற்றும் இதர கான்கள்.
"அவர் ஹிந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஸ்டைல் அருமையாக இருக்கும். அவர் நம் சொத்து"
-அமிதாப் மற்றும் சில ஹிந்தி இயக்குநர்கள்.
எனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை. ரஹ்மான் தமிழன். தமிழகத்துக்கு சொந்தமானவர்.
"மதராஸி வாலா, ஓஹ் ச்சோர் சாலா" (மதராஸிகள் திருட்டு......) என இதுநாள்வரை நம்மை ஏளனம் செய்துவந்த மும்பை, டெல்லியர்கள் இப்போது ரஹ்மானை மட்டும் தூக்கி வைத்து சொந்தம் கொண்டாடக் காரணம்? இந்தியாவுக்கு கிடைத்த ஆஸ்கர், பாலிவுட்டுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..
இதன் ஒரு பகுதியாக, ரஹ்மானுக்கு சஹாரா சிட்டியில் மிகப் பெரிய அரண்மனை வடிவிலான வீட்டை பரிசாகக் கொடுத்து, அங்கேயே மடக்கிப் போடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆஸ்கர் மேடையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் இந்த 'இழுப்புக்கு' ஒத்துவரமாட்டார் என்றாலும்....அவர் நம் சொத்து. நம் சொந்தம். பசித்து சாப்பிடும் இலையில் முன்பின் அறியாதவன் கைவைத்தால் சும்மா விடுவோமா? உலகம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே "ரஹ்மான் நார்த் இண்டியன் ஹை" எனக் கூற முயற்சிப்போரை என்ன செய்யப் போகிறோம்?
என் கருத்தை ஏற்றுக் கொண்டால் தமிலிஷ் மீது ஒரு ஓட்டு போட்டு விடுங்கள்!
Tuesday, February 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
வெளிநாட்டவர்களும் இந்தியா என்றால் பாலிவுட் என்று தான் நினைத்துக்கொண்டுள்ளார்கள்.
நமது தமிழ் படங்கள் வெளிநாடுகளில் வெற்றி பெற்றாலும் அதுவும் பாலிவுட் என்றே நினைக்கிறார்கள்..(அவர்களை கூறி குற்றம் இல்லை, நாம் இத்தனை பிரிவுகளோடு இருப்பது அவர்களுக்கு எப்படி தெரியும்)
என் கோபம் எல்லாம் இவர்கள் துபாயில் "இந்தியா திரைப்பட விழா" எடுத்து அங்கு "ஹிந்தி" படங்களுக்கு மட்டும் விருது கொடுத்தார்கள், அதற்க்கு மம்மூட்டி ஒருவர் மட்டுமே எதிர்ப்பு குரல் கொடுத்தார்.
வட இந்தியாவில் தலைமை இருப்பதால் அவர்கள் வைத்ததே சட்டம் என்று இருக்கிறது.
திறமையை அனைத்து நாட்களும் மறைக்க முடியாது..தென் இந்தியர்களின் திரை திறமை (குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம்) ஒருநாள் உலகிற்கு வெளிப்படத்தான் போகிறது ஐ டி துறையை போல.
ஏ.ஆர். ரஹ்மான் பிறப்பால் ஹிந்து. தழுவலால் இஸ்லாமியர். அவர் அப்பா சேகர் தமிழர் என்பதை முதல்வரும் அவரது அடிப்பொடிகளும், உங்களையும் சேர்த்துத்தான், ஒப்புக்கொள்ளுகிறார்களா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி! நிலைமை இப்படி இருக்கும்போது உங்கள் பதிவு அர்த்தமற்றது.
ஏ. ஆர். ரஹ்மான், எல்லா புகழும் இறைவனுக்கே... என்று சொல்லியதை எந்த NEWS - சேனலும் ஒளிபரப்பவில்லை. மற்றொரு பேட்டியையே.. அதிகமாக ஒளிபரப்பினார்கள்.
வணக்கம் திரு.கிரி. வருகைக்கு நன்றி. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ரஹ்மான் ஒருவரை அவர்கள் இழுக்க முயற்சிக்கலாம். ஆனால் எத்தனை சாதனையாளர்களை அவர்கள் சொந்தம் கொண்டாட முடியும்?
வணக்கம் அனானிமஸ்...முதல்வரும் அவரது அடிப்பொடிகளும் ஒப்புக்கொள்கிறார்களா அல்லது ஒப்புக்கு வாழ்த்துகிறார்களா என்பதை நான் ஆராயவில்லை. ஹிந்து, இஸ்லாமியர் என்ற பேதங்களுக்கும் இங்கு இடமில்லை. அவர் தமிழர். அதனால் தான் என் ஆதங்கத்தை பதிவிட்டேன்.
வாங்க சதீஷ். சரியாச் சொன்னீங்க
nalla cinthanai
tamil pasiya rahman tamilai vitukuduka matar
நன்றி ராஜி
யார் என்ன சொன்னாலும் அவர் தமிழர் என்பதை அவரே ஆஸ்கார் விருது மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என ஓங்கி உரைத்ததன் மூலம் நிலை நாட்டி விட்டார்.
//உலகம் பாலிவுட்டை போற்ற வேண்டும். இதை வைத்து ரஹ்மானை மிகப் பெரிய தொகைக்கு 'குத்தகை' எடுத்து (தங்கள் படங்களுக்கு), அதன் மூலம் உலகளவில் வியாபாரம் பண்ணலாம் என்ற வியாபார தந்திரம் தான்..//
சரியாய் சொன்னிங்க..
உண்மை நிலைமை என்னவென்றால் வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றால் அது பாலிவுட் என்ற மாதிரித்தான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
பாலிவுட் என்ற சொல்லே போலித்தனமானது. ஹாலிவுட் என்ற சொல்லில் இருந்து
உருவானது.
இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாவைத் தாண்டி இன்னும் எத்தனையோ மொழிகளில் வரும் திரைப்படங்கள் இருப்பது என்பதை இந்தியாவைப் பிரதிநிதிப் படுத்தும் பொழுது 'இந்தியர்கள் ' காட்டிக்கொள்வதே இல்லை.
இந்தியா என்பது பல தேசிய இனங்களின் ஒரு கூட்டமைப்பு. சொல்லப்போனால் இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்புக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
ஒரு வித்தியாசம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பல தேசிய இனங்களும் தமக்கு என்று சுதந்திரமான சொந்த நாடுகளை கொண்டுளார்கள் அந்த சொந்த நாடுகளின் கூட்டமைப்புத்தான் அது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் எல்லாத் தேசிய இனங்களும் சமத்துவத்துடன் நடத்தப் படுகின்றன ,எல்லா மொழிகளுமே சம அந்தஸ்து கொண்டுள்ளன பத்து கோடி மக்கள் தொகை கொண்ட ஜேர்மனியர்களும் எண்பது லட்சம் மட்டுமே கொண்ட சுவீடிஷ் காரர்களும் ஒரே மாதிரியாகத் தான் அங்கு மதிக்கப் படுகிறார்கள்.ஒவ்வொருவரும் தங்கள் இன மொழி அடையாளங்களை தமது கலை இலக்கியத் துறையை வெளி உலகுக்குக் காட்டக் கூடியதாக உள்ளது.
ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை இந்தியா என்றால் எல்லோருமே இந்தி பேசும் தேசிய இனமாகத்தான் வெளியே காட்டப் படுகிறார்கள்.அது சினிமா என்றாலும் சரி ,விளையாட்டுத்துறை என்றாலும் சரி ,வேறு எந்தத் துறை என்றாலும் சரி.
இத்தனைக்கும் தமிழ் ,தெலுங்கு ,மராத்தி இன்னும் பல இந்திய மொழிகள் எத்தனையோ கோடி மக்களால் பேசப்படும் மொழிகள்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தனியே ஜெர்மனியின் மக்கள் தொகை மட்டும் தான் தமிழ் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகானது,மற்றைய முப்பது நாடுகளின் மக்கள் தொகையும் தமிழ் நாட்டை விட குறைவுதான்
ஆனால் தமிழ் திரையுலகை வாட்டார சினிமா என்று சொல்லி முக்கியத்துவம்
இல்லாத மாதிரித் தான் இங்கு பேசுகிறார்கள்.
தமிழ்,மலையாளம் ,மராத்தி வங்காளம் கன்னடம் என்று பல மொழிகளிலும் திறமை வாய்ந்த கலைஞர்கள் பலர் உள்ளனர் அவர்கள் தங்களது அடையாளங்களையும் தனித்துவத்தையும் இழக்காமல் அங்கீகரிக்கப் படுவதற்கு மம்முட்டி போன்று மற்றவர்களும் கருத்து சொல்ல வேண்டும்.
sorry I have to come as anony,I am having difficult with others
--Vanathy.
நன்றி மதுரை மைந்தன்
நன்றி வினோத்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை வானதி.
ஏ .ஆர் . ரஹ்மான் தமிழ் தன் ஆனால் தமிழ் டிவி சநேல்களில் அவர் ஆஸ்கார் எடுத்ததை பெரிய விடயமாக சொல்ல வில்லை. ஹிந்தி நேவ்ஸ் சனெல்கலில் கடந்த ஒரு வரமாக அவர் விருதை வெல்ல பிரார்த்தனைகள் வாழ்த்துகள் என அமர்கள படுத்தின இந்திய தமிழ் ஊடகங்களை விட இலங்கை தமிழ் ஊடகங்கள் இவருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்தன, இன்று வரை சன் நெட்வொர்க்கில் மாத்திரம் அவருக்கு வாழ்த்துகளை ஒளிபரப்பு செய்தது. இவ்வளவுக்கும் இவை அவர் பாட்டை போட்டு போட்டு காசு சம்பத்க்கும் ஊடகங்கள்.
விஜய் டிவி மற்ற டிவி களோடு ஒப்பிடும் பொது ஓரளவுக்கு பரவாயில்லை. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க நிகழ்ச்சிகள் செய்தது. என்னை பொறுத்த வரை அவரக்கு ஹிந்தி ஊடகங்கள் செய்த பாராட்டு அளவுக்கு தமிழ் ஊடகங்கள் செய்ய வில்லை என்றே சொல்ல தோன்றுகிறது
நீங்கள் சொல்வது உண்மைதான், லதாமங்கேஷ்கர் - இந்த அம்மா வாணிஜெயராமுக்கு இந்தி வாய்ப்புக் கொடுத்தால் நான் இனிபாடமாட்டேன் என்று அடம்பிடித்தது. காரணம் வாணிஜெயராம் பாடிய ஒரு பாட்டு ரொம்ப ஹிட் ஆகிவிட்டதாம்.
நேற்று கூட இந்த அம்மா, தென்னிந்திய இசையோடு இணைந்து கொடுப்பதில் வல்லவராம் என்று ரஹ்மானை வாழ்த்துவதோடு இல்லாமல், ரஹ்மானின் இசை இந்தி இசையாம்.
நன்றி யோ
வருகைக்கு நன்றி கோவி.கண்ணன். இந்தம்மா நல்ல பாடகர் என்பதில் சந்தேசமில்லை. ஆனால் இவரது மொழிப்பற்று அபாரமானது. ஒருமுறை பாலம் கட்டுவதற்காக இவரது பங்களாவின் (பண்ணை வீடு என நினைக்கிறேன்) ஒரு பகுதியைக் கேட்டதற்கு, மகாராஷ்டிரா அரசையும் மராட்டிய மொழியாளர்களையும் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தார்..கடைசியில் பால கட்டுமானப் பணிகள் அம்மையாரால் முடங்கியது. அதன் பின் என்னானது எனத் தெரியவில்லை. தான் சார்ந்திருக்கும் மொழியாளர்களையே கடுப்பேற்றிய இவர், தென்னகத்தையா மதிக்கப் போகிறார்??
ஏன் ஐயா,
நீங்களெல்லாம் திருந்தவே மாட்டடீர்களா?,,ரகுமானை
தமிழனென்றும் மலையாள்த்தான் என்றும் கூறு போட்டுக்கொண்டு,,,இந்து என்றும் முஸ்லிம்என்றும்
பேதம் பேசிக் கொண்டு,, அவர் தமிழ்நாட்டுக்கு தான்
சொந்தமென்றும் அவரை பலிவுட் காரர்களுக்கு அடகு வைக்கக் கூடாது என்றும் செளக்கார்பேட் சேட்டுவைப் போல பேசிக்கொண்டிருப்பது,,, தமிழனுக்குள் இன்னும் ஆழ்மனதில் பிரிவினைவாதம்
தான் மூழ்கிக் கிடக்கிறது என்பது தெளிவாகிறது.
யார் ஜெயிததால் என்ன ஜெயித்தது இந்தியன் என்கிற
சிந்தனை என்போது வரபோகிறதோ தெரியவில்லை.
தயவுசெய்து இதைப் போன்ற அர்த்தமற்ற சிந்தனைகளை விட்டோழியுங்களேன்,,,,,,,
ஏன் ஐயா,
நீங்களெல்லாம் திருந்தவே மாட்டடீர்களா?
....யார் ஜெயிததால் என்ன ஜெயித்தது இந்தியன் என்கிற
சிந்தனை என்போது வரபோகிறதோ தெரியவில்லை....
எது இந்தியா?
யார் இதியர்கள்?
தமிழ் நாட்டில் ஓக்கேநக்கல் குடி நீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்?
பாகிஸ்தானா?
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா? என்று
அதே போல், மும்பைய்ல் தமிழர்களை அடித்து விரட்டியது யார் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா?
ஏன் ஐயா,
நீங்களெல்லாம் திருந்தவே மாட்டடீர்களா?
....யார் ஜெயிததால் என்ன ஜெயித்தது இந்தியன் என்கிற
சிந்தனை என்போது வரபோகிறதோ தெரியவில்லை....
எது இந்தியா?
யார் இதியர்கள்?
தமிழ் நாட்டில் ஓக்கேநக்கல் குடி நீர் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்?
பாகிஸ்தானா?
இந்த வருடம் மழை இல்லை என்றால் தெரியும் கர்நாடகக்காரன் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா? என்று
அதே போல், மும்பைய்ல் தமிழர்களை அடித்து விரட்டியது யார் இந்தியனா, இல்லை பாகிஸ்தானியா?
நன்றி moulefrite. ஆனால் தங்கள் கருத்துக்கு நான் உடன்படமாட்டேன். அனானிமஸ் சரியாக கூறியிருக்கிறார். முல்லை பெரியார் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற பரிந்துரையை மதிக்காமல், நாம் பலமுறை உயர்மட்டக் குழு மூலம் நடத்திய பேச்சுவார்த்தைகளை அலட்சியப்படுத்தியது கேரள அரசு. மத்திய குழுவின் ஆய்வு முடிவுகளை நம்பாமல்,தனது எம்.எல்.ஏ.குழுவை அனுப்பி அணையை ஆய்வு செய்து நம்மை அவமானப்படுத்திய கேரள அரசு இந்திய ஜனநாயகத்துக்குட்பட்டது தானே?
ஒத்துக்கிறேன்... நீங்கள் சொல்வது மிகச் சரி.
ஆனால் ரஹ்மானும் ஒரு வட்டத்திற்குள் இருக்க வேண்டியவர்/கூடியவர் அல்ல.
கருத்துக்கு நன்றி ஆ!இதழ்கள். ரஹ்மானின் வெற்றி எல்லைகள் நீள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். ஆனால் அவரை பாலிவுட்டின் மைந்தன் எனக் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?
அதுதான் நான் தமிழன் மட்டுமல்ல பாலிவுட்காரனுந்தான் என்பது போல ரஹ்மான் தமிழோடு இந்தியிலும் பேசிவிட்டாரே!!!
ஆனால் பாலிவுட்காரனை போலவே ரகுமானை தமிழர்கள் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. அவர் இசையமைக்க முதலில் வாய்ப்பு தந்த மொழி மலையாலம்.அவருக்கு இந்திய அளவில் புகழ் தேடி தந்தது தமிழ். உலகத்தை அவரை நோக்கி திருப்பியது இந்தி. இல்லாவிடில் இளையராசாவைப் போல் அவரும் தமிழ்நாட்டுடன் முடிந்து போயிருப்பார். அதனால் அவர் இந்தியாவின் சொத்து இல்லை அவர் இசை உலகத்தின் உரிமை!! அவரை முஸ்லிம், தமிழன், பாலிவுட்காரன் என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க கூடாது!!!
//எனக்கு தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுண்டு. அதற்காக அம்மா தாலியைக் கழட்டி காதலிக்கு போட்டு அழகு பார்ப்பது போல, அவரை பாலிவுட் இசையமைப்பாளர் தான் என ஆமோதித்துக்கொண்டு கைதட்டும் பக்குவம் எனக்கில்லை//
ஹாஹாஹாஹா....சான்ஸே இல்ல...படிக்கும் போதே வாய் விட்டு சிரிச்சிட்டேன்
word verficationஐ எடுத்து விடுங்கள். பலர் பின்னூட்டமிட இது தடையாக இருக்கும்
வருகைக்கு நன்றி அனானி.
நன்றி பிளீச்சிங் பவுடர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். கண்டிப்பாக word verification எடுத்துவிடுகிறேன்.
குழந்தை இல்லாதவர்கள் தத்து எடுப்பார்கள். ரஹ்மானை வேண்டுமானால் ஹிந்தி திரையுலகம் தத்து எடுத்துகொள்ளட்டும் ரஹ்மான் விருமபினால் செல்லட்டும் .ஆயிரம் ரஹ்மான்கள் உலவிகொன்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டில் வாய்ப்பிற்காக .
வருகைக்கு நன்றி சுரேஷ்...
நிச்சயமாக!!
சும்மா நம்ம நாமே தான் தூக்கிப் பிடிச்சுகிட்டு இருக்கம்.
Post a Comment